தமிழ் எழுத்துக்களில் சில சீர்திருத்தங்கள்,
எழுத்துக் குறைப்புக்கள் மற்றும் எழுத்துக்களின் மறுமலர்ச்சிகள்
தமிழ்த்தாய் ஈன்ற மைந்தர்களில் ஒருவனாகிய நான் செம் மொழியாம் தமிழ் மொழிக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் மொழியிலுள்ள குறைபாடுகள், தவறுகள் மற்றும் குழப்பங்கள் போன்ற அனைத்து சீர்கேடுகளையும் போக்கி, எளிய நடையில், சுலபமாக மொழியைக் கையாள சில சீர்த்திருத்த முறைகளை தமிழ் மொழியின் மறுமலர்ச்சியாக தங்கள் முன் சமர்ப்பிக்கின்றேன்.
- உயிரெழுத்துக்களில் உள்ள தவறுகள், குறைகள் மற்றும் முறைகேடுகள்
- உயிர் மெய் எழுத்துக்களில் உள்ள தவறுகள், குறைகள் மற்றும் முறைகேடுகள்
- தேவையற்ற மற்றும் பயன்படாத ஆயுத எழுத்து
- முதல் எழுத்துக்கள் முப்பதா?
இனியும் குறைகள் இருக்கலாமா?
செம்மொழி என்னும் பட்டத்தைப்பெற்று விட்டோம். இனியும் அச்செம்மொழியில் குறைகள் இருக்கலாமா? மாற்றான் ஒருவன் செம்மொழியின் குறைபாடுகளை சுட்டிக்காட்டி விட்டால் நம் செம்மொழிக்கு இழுக்கு மற்றும் தலைகுனிவு ஏற்பட்டு விடுமே என்ற அச்சத்தால் துரித நடவடிக்கை எடுக்க பணிவுடன் வேண்டுகிறேன்.
நடைமுறைப்படுத்துவதில் மூன்று கால கட்டங்கள் தேவை:
தமிழ் மொழியில் உள்ள குறைபாடுகளைப் போக்கி சீர் செய்து, செப்பனிட்டி, நடைமுறைப் படுத்த தமிழக அரசு முன் வரவேண்டும். எழுத்துக்கள் குறைப்பு மற்றும் சீர்த்திருத்த முறைகளை நடைமுறைப்படுத்த சுமார் 30 ஆண்டுகள் கால அவகாசம் தேவைப்படும்.
- முதல் கட்ட நடவடிக்கைகள் - 2008 முதல் 2018
- இரண்டாம் கட்ட நடவடிக்கைகள் - 2018 முதல் 2028 வரை
- மூன்றாம் கட்ட நடவடிக்கைகள் - 2028 முதல் 2038 வரை
இவ்வாறாக மூன்று கால கட்டங்களில் அதாவது 30 ஆண்டுகளில் சீர்திருத்த முறைகளை எளிமையாக நடைமுறைப் படுத்திவிடலாம்.